Bachan Babuji Maharaj in Tamil


பாபுஜி மகாராஜ் அவர்களின் வசனம் 72. அலகாபாத் 11–4–1937
ஒவ்வொரு சக்திக்கும் ஒரு மையம் உண்டு. அதிலிருந்து தாரைகள் (ஆற்றலின் கதிர்கள்) வெளியேறி, செயல் தொடங்கும். சக்தியும், அந்த இடத்திற்கான சப்தமும் (எந்த ஒரு கருவியும் இல்லாமல் எதிரொலிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒலி) அந்த மையத்தில் இரகசியமாக உள்ளது. ஒவ்வொரு மையமும் அனாமி புருடனின் (பெயர்களுக்கு அப்பாற்பட்ட முழுமையான ஆற்றல்) பிரதிபலிப்பு ஆகும். அனாமி புருடன் மையங்களின் மையமானவர். மனித உடலின் மையம் சகசதல் கவலில் (ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் மையத்தில்) உள்ளது. மூவுலகையும் படைத்த ஒலியும் அங்கே ரகசியமாக இருக்கிறது.
ஒரு மையத்தில் இருந்து பரவும் அனைத்து தாரைகளையும் சேகரித்து அந்த மையத்தில் சேர்த்தால், அங்குள்ள சக்தி கிடைக்கும். அந்த மையத்தின் தெய்வத்தை மந்திரத்தின் மூலம் அடைந்தால் அந்த இடத்தின் சக்தி நமக்கு கிடைக்கிறது. ராதாஸ்வாமி என்ற பெயரே எல்லா மந்திரங்களின் பரம மந்திரம் ஆகும். அதை சுமிரன் செய்வதாலும் (மந்திரத்தை ஆழ் நினைவில் கொண்டு ஜபம் செய்வது) குருவின் ரூபத்தை தியானிப்பதாலும் (உருவத்தை ஆழ் மனதில் காட்சிப்படுத்துவது) சப்தத்தைக் கேட்பதாலும், சூரத் (மனங்களில் இருந்து முழுவதுமாகப் பிரிந்த தூய ஆற்றல் சக்தி) அதன் அசல் இருப்பிடத்திற்கு திரும்ப முடியும்.
1. எந்த ஒரு செயலும் நடக்கும்போது, அந்தச் செயல் எதன் மூலம் நடக்கிறதோ அந்தச் சக்தியின் ஒரு மையம் அல்லது ஒரு புள்ளி உருவாகிறது. மையத்தில் இருந்து தாரைகள் வெளிப்படுகின்றன மற்றும் அந்த தாரைகள் மூலம் அந்த செயலை ஒத்த மற்ற செயல்கள் நடைபெறலாம். அதிலிருந்து ஒரு தாரை வெளிப்பட்டு மற்றொரு மையத்தையும் புள்ளியையும் உருவாக்குகிறது. அதில் இருந்து மீண்டும் தாரைகள் வெளிப்படுகின்றன. இந்த முறையில், கீழே இறங்கி, ஒவ்வொரு முறையும் வெளியில் ஒரு இடம் பிடித்து நடவடிக்கை நடைபெறுகிறது.
கீழ் இறக்கம் மிகவும் அதிகமான போது, மற்றும் வெளிப்புறத்தில் இறங்கும் போது, ஒரு இடத்தை அமைக்காமல், தனித்தனியான மையங்களும், புள்ளிகளும் உருவெடுக்காமல், எந்த செயலும் நடை பெற முடியாது. மையத்தில் அதன் சக்தியும் சப்தமும் இரகசியமாக உள்ளன. முதலில் சப்தம் ஏற்படுகிறது பிறகு தாரை வெளிப்பட்டு அதன் பின்னர் செயல் வெளிப்படுகிறது. இந்த வகையில், மேலிருந்து கீழ் வரை நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனாமி புருடனின் பிரதி ஆகும். அனாமி புருடன் என்பவர் அனைத்து புள்ளிகளின் புள்ளி, அனைத்து மையங்களின் மையம், அனைத்து நோக்கங்களின் நோக்கமாக உள்ளவர்.
அங்கு சப்தம் உள்ளடங்கி இரகசியமாக இருக்கிறது. அவரே அறிய முடியாத, எல்லையற்ற, உருவமற்ற, எல்லாவற்றிற்கும் மூலகாரணமானவர். தயாள தேசத்தின் உருவாக்கம், அவரிடமிருந்து உருவானது என்று கூறலாம், ஆனால் அது அழிவதில்லை. இதற்குப் பிறகு நடந்த படைப்பு, உருவாகி அழிகிறது. தயாள தேசத்தின் கீழே, உணர்வு மிகவும் குறைந்து, நிறம் கருமையாக மாறியது, அங்கே காலனும் மாயாவும் பிறந்தனர், அதாவது காலனின் சக்தி அதன் மையத்தை உருவாக்கி கீழே செயலைத் தொடங்கியது.
தயாள தேசம் சூரத்தால் உருவாக்கப்பட்டது. தயாள தேசத்திற்கு கீழே, காலன் தன் படைப்பை உருவாக்கினார், ஆனால் சூரத்தின் உதவியுடன். காலனின் படைப்பு உருவாகி அழிகிறது. மிகத் தாழ்ந்து, புறம்போக்கு ஆவதால், படைப்பு அழிந்து போவது மட்டுமின்றி, ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக ஆக்கமும் அழிவும் ஏற்படுகிறது.
2. நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒவ்வொரு சக்திக்கும் ஒரு மையம் அதாவது புள்ளி உள்ளது, அங்கு அதன் சப்தம் மறைந்திருக்கும்.
அங்கிருந்து ஒரு தாரை வெளிப்பட்டு ஒரு இடம் பிடிக்கிறது. பிறகு அதன் செயல் தொடங்குகிறது. அந்த மையம் அந்த சக்தியின் மிக உயர்ந்த நிலை ஆகும். பிண்ட அதாவது மனித தேகத்தின் உயர்ந்த புள்ளி ஆயிரம் இதழ் தாமரையின் இடமான சகசதல் கவல் என்ற இடத்தில் இருக்கிறது. மூன்று உலகங்களையும் படைத்த சப்தமும் அங்கே உள்ளது, ஆனால் மறைவாக வைக்கப் பட்டுள்ளது. அங்கிருந்து தாரை வெளிப்பட்டு மூன்றாவது கண் என்று சொல்லப்படும் தீஸ்ரா தில் என்ற ஒரு இடம் அமைக்கிறது அங்கு சூரத் அமர்ந்து தேகத்தை உருவாக்குகிறது.
இந்த ஒரு தாரை, அதிலிருந்து வெளிப்பட்ட சத், ரஜஸ், தமஸ் என்ற மூன்று தாரைகள், ஐந்து தத்துவங்கள், இருபத்தி ஐந்து ப்ரக்ருதி அல்லது இயல்புகள் இவை அனைத்தும் கூடி உருவாக்கிய மாயை, பிண்ட எனப்படும் மனித உடலாகும். ஒவ்வொரு சக்தியின் களஞ்சியம் உள்ளது. ஐந்து தத்துவங்களின் களஞ்சியம் இருக்கிறது. பாட்டில் ஒரு இடத்தில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது:
“अग्नि पवन और जल भंडार,
तीनों पाए छोड़े वार"
“அக்னி பவன் ஒளர் ஜல் பண்டார், தீனோ பாஏ சோடே வார்”
நெருப்பு காற்று நீர் களஞ்சியம், மூன்றும் பெற்றேன் தாக்குதலுக்கு உள்ளானேன்.
3. மையத்தில் இருந்து பரவிய அனைத்து சக்திகளும் அல்லது தாரைகளும் சேகரிக்கப்பட்டு அந்த மையத்தில் கூடினால், அங்குள்ள முழு சக்தியும் அடைந்து அந்த சக்கரத்தினுடைய தெய்வத்தின் சித்தி கிடைக்கும். குடா சக்கரம் அல்லது ஆசனவாய் சக்கரத்தில் இருந்து வெளிப்படும் அனைத்து தாரைகளையும் சேகரித்து அந்த இடத்தில் சேர்த்தால், விநாயகப் பெருமானின் சக்தி அங்கு கிடைக்கும்.
4. பழங்காலத்தில், பிராணயாமா பயிற்சி மூச்சு மற்றும் சுவாசம் அல்லது முத்திரைகள் பயிற்சி மூலம் செய்யப்பட்டது. இப்போது, இந்த நேரத்தில், யாரும் அவற்றை முறையாகப் பயிற்சி செய்ய முடியாது, யாரும் அவற்றை முழுமையாகப் பயிற்சி செய்பவர்களாகத் தெரியவில்லை. கொஞ்சம் சக்தி இருப்பதாகத் தோன்றும் சிலர், எந்த சக்கரத்தையும் வெல்லவில்லை அல்லது எந்த தெய்வத்தையின் சித்தியையும் அடையவில்லை. அவர்கள் கணங்கள் அல்லது ஜோகனிகளை மட்டுமே சித்தி செயகிறார்கள். எந்தவொரு சக்கரத்தின் தெய்வத்தையும் சித்தம் செய்வது மிகவும் கடினம், உண்மையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு தெய்வம் உள்ளது, அவருக்கு பல கணங்களும் ஜோகினிகளும் உள்ளனர்.
கணம் அல்லது ஜோகினி ஒன்றை சித்தம் செய்வதின் மூலம், ஒருவர் அதன் சக்தியை அடைகிறார். இந்த மாதிரியான சக்தியை அடைவதில் எந்த ஒரு மதிப்பும் இல்லை. உண்மையில் அது தீங்கு விளைவிக்கும். அதில் சிக்கிக் கொள்பவர்களுடைய முன்னேற்றம் முடங்கிவிடும். ஒவ்வொரு சக்கரத்தையும் வென்று முன்னேறும் பழங்காலப் பழக்கவழக்கங்கள், பிரதான முறையில் ஒரு சக்கரத்தை அடைந்தவுடன், அங்குள்ள சக்தி உடனடியாக விழித்தெழும் காரணத்தால், பயிற்சி செய்பவர் அந்த இடத்திலேயே நின்று விடுகிறார். எந்தவொரு சக்கரத்தின் தெய்வத்தையும் சித்தம் செய்வது மிகவும் கடினம், உண்மையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை.
இந்த நடைமுறைகளில் வெற்றியாகக் கருதப்படுவது விரைவாக அடையப்படுகிறது, ஏனெனில் பயிற்சியாளர் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் உள்ள முகாமை இலக்காகக் கொண்டு பயிற்சி செய்யப்படுகிறது. மேலும் அந்த முகாமை அடைந்தவுடன், அங்குள்ள சக்தி விழித்துக் கொள்கிறது. அங்கு சென்றடைவதன் மூலம் அங்குள்ள தெய்வம் நிலைபெற்று அங்கே ஒலிக்கும் சப்தமும் கேட்கும். அதற்கு மேலே இருக்கும் இடத்தின் ரகசியமும் முகவரியும் தெரிந்து, நிரத் அல்லது பற்றின்மையை தூண்ட முடிந்தால், அங்குள்ள தெய்வத்தின் சிரத்தில் கால்களை வைத்து முன்னேறலாம், இல்லையெனில் அதே இடத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
5. கீழ் மூன்று சக்கரங்களின் இயக்கம் காரணமாக, விலங்கு சக்திகள் விழித்தெழுகின்றன. இதயச் சக்கரம் அதாவது அந்தக்கரண் முகாமின் கதி அடைந்த பிறகு மனிதனாகிறார்கள். எல்லா மனிதர்களும் அந்தக்கரண் முகாமில் அமர்ந்து செயல் படுகிறார்கள், ஆனால் இதிலிருந்து அவர்களுக்கு அந்த அந்தக்கரண் முகாமில் கதி கிடைத்ததாகச் சொல்லமுடியாது. அந்தக்கரன் முகாமின் வெளிப்புற மூலத்திலிருந்து, மனிதர்கள் அந்தக் கட்டத்தின் புரிதல் மற்றும் புத்திசாலித்தனத்தின் படியும், அவர்களின் கர்மா மற்றும் விதியின்படி எழுந்த விருப்பு வெறுப்புகளின் படியும் செயல்படுகிறார்கள்.
அந்த முகாமின் சக்தியை அடைவது கூட மிகவும் பெரிய விசயம். அதேபோல, மூன்றாவது கண்ணாகிய தீஸ்ரா தில் எனப்படும் இடத்தில் இருந்து உடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது, அங்கு சூரத் அமர்ந்து இருக்கிறது, ஆனால் நமக்கு அங்கு செல்லும் கதி இல்லை. அங்கு நமக்கு கதி இருந்தால் அங்குள்ள சக்தி விழித்துக் கொள்ளும். எந்த ஒரு சப்தத்திலிருந்து தாரை வெளிப்பட்டு தீஸ்ரா தில்லில் இடம் பிடித்திருக்கிறதோ அது சஹதல் கவலில் இருக்கிறது. அதனால்தான் மனித உடல் அதாவது பிண்டத்தின் சுமேர் அல்லது உச்ச நிலை சகசதல் கவல் என்று மேலே கூறப்பட்டது. அந்த இடத்தின் உரிமையாளர் நிரஞ்சன் ஆகும்.
மனித உடலில் வருவதற்கு முன் நிரஞ்சனின் தரிசனம் கிடைக்கிறது. நிரஞ்சனின் தரிசனம் கிடைத்த பிறகே மனித உடலில் வருவதற்கான திறமை கிடைக்கிறது. அசுத்தத்தாலும், அமைதி இன்மையாலும் அங்கே தங்க முடியாவிட்டாலும், இறக்கும் நேரத்தில் நிரஞ்சனின் தரிசனம் மீண்டும் கிடைக்கிறது. பின்னர் அவரவர் கர்ம வினைப்படி சௌராசி எனப்படும் எண்பத்து நான்கு லட்சம் வாழ்க்கை வர்க்கங்களில் இறங்க வேண்டி வருகிறது. ராதாஸ்வாமி தயாளிடம் தஞ்சம் புகுந்தவருக்கு, இறக்கும் நேரத்தில் நிரஞ்சனுக்கு முன் செல்லும் போது, குறைந்தபட்சம் அங்கேயே தங்கி, அங்கேயே குடியமர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அங்கே தங்குவதற்கு இடம் கிடைத்தால், சௌராசியில் இருந்து தப்பிக்கலாம்.
6. வெவ்வேறு சக்கரங்களுக்கும் தெய்வங்களுக்கும் மந்திரங்கள் இருப்பதைப் போலவே, அதை ஜபம் செய்வதால் அந்த சக்கரத்தின் மூல சக்தியையும் தெய்வத்தையும் எழுப்புவது போல, ராதாஸ்வாமி என்ற நாமம் இறுதி மந்திரம் ஆகும். இது எல்லாவற்றையும் விட தொலைவில், எல்லாவற்றிற்கும் மேலாக, வெகு தூரத்தில் இருக்கும் முகாமின் மந்திரமாகும். அதனால் தான் எல்லோருக்கும் இந்த பெயரில் நம்பிக்கை பிறப்பதில்லை மற்றும் கீழுள்ள சக்கரங்களின் பயிற்சியைப் போல சூரத் சப்த அப்பியாசத்தில் அல்லது பயிற்சியில் சீக்கிரமாக வெற்றி பெறுவது இல்லை.
சந்த் என்று சொல்லப்படும் சத்த புருடனின் அடியார்களின் பயிற்சி முறை தனித்துவமானது. பிண்ட தேசத்தின் தீஸ்ரா தில் எனப்படும் உடல் உருவாகும் இடத்திலிருந்து, ராதாஸ்வாமி என்ற நாமத்தின் சுமிரன் செய்யப்படுகிறது. இதனால் தீஸ்ரா தில்லில் இருந்து இருந்து பரவிய தாரைகள் அனைத்தும் அங்கே உள்ளிழுக்கப்பட்டு ஒன்று கூடி மூன்று குணங்கள், ஐந்து தத்துவங்கள், இருபத்தைந்து இயல்புகள் என்ற மாயையால் எழுந்த அழுக்காறும் ஜடத் தன்மையும் நீங்கி சூரத் தூய்மையாக மாற ஆரம்பிக்கும்.
ஆரம்பத்தில் பயிற்சியாளர் நாமத்தை ஜபிக்கலாம், ஆனால் தியானம் நடக்காது, ஏனென்றால் குரு மீது அன்பு இருந்தால் தியானத்தில் வடிவம் வெளிப்படும். அதனால்தான் ஆரம்பத்தில் சுமிரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது உருவத்தின் மீது அன்பையும் உருவாக்கும். சுமிரன் ஓரளவிற்கு முதிர்ச்சியடையும் போது, வடிவம் வெளிப்படும் மற்றும் குருவின் மீதுள்ள அன்பினால் அந்த ரூபத்தை பற்றிக் கொள்வதால் அதன் ஆதரவில் மேலே ஏறி சப்தமும் கேட்கலாம். பிறகு சப்தத்தை பிடித்துக் கொண்டு கௌண் அங் அதாவது எந்த ஒரு சக்தியும் வெளிப்படாமல் உள்ளடங்கிய மேலேற்றம் நடக்கும்.
ஒரு முகாம் வரை கௌண் அங் மூலம் அதிக பட்சம் அடைந்த பிறகு அங்கிருந்து மேலே உள்ள அடுத்த முகாமிற்கு கௌண் அங் முறையில் ஏற்றம் அடையம். மிகவும் தொலைவில் இருக்கும் முகாமின் பெயர் மற்றும் உருவத்தின் மூலம் முன்னேற்றம் நடக்கிறது மற்றும் கௌண் அங்கில் மேலேற்றம் ஏற்படுகிறது என்பதால் எந்த முகாமின் சக்தியும் வெளிப்படுவதில்லை எங்கும் முடங்கி போவதற்கான பயமும் இல்லை அதனால் மற்ற கீழே இருக்கும் பயிற்சிகளை போல் சந்த மதத்தின் அப்பியாசம் செய்பவருக்கு சாதாரணமாக வெற்றி கிடைத்ததாகத் தெரிவதில்லை.
7. நாமத்தை சரியான இடத்தில், சூரத் மற்றும் மனதின் மூலமாக சுமிரன் செய்தால் விவரிக்கப்பட்ட பலன் கிடைக்கும். வெறும் நாக்கால் ஜபிப்பதால் அந்த பலன் கிடைக்காது. அதில் கர்மாவின் பலன் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், நீங்கள் மற்ற மந்திரங்களை உச்சரிப்பது அல்லது ஜெபமாலையை திருப்புவது போல் செய்தலும், இது உண்மையான மந்திரம் என்பதால், இதன் பலன் அதிகமாக இருக்கும். கர்மவினை நீங்கி சுத்தம் பெற உதவும். சூரத்தும் மனமும் உள்நோக்கி இழுபட்டு மேலெழும்புவதற்கு், சூரத் மற்றும் மனதின் மூலம் ஜபிக்க வேண்டும், அதுவும் சூரத்தின் இடத்திலிருந்து செய்ய வேண்டும் அப்பொழுது அதன் பலன் கிடைக்கும்.
Translation of Hindi Discourse by Babuji Maharaj, the fourth Guru of Radhasoami Faith, Soamibagh, Agra.